சூப்பர்ஹீரோவாக சூர்யா? அடுத்த படம் இந்த இயக்குனர்தான்..

பிறப்பு : - இறப்பு :

போலீஸ் வேடத்தில் சிங்கம் படங்களில் நடித்துவந்த சூர்யா தற்போது வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கியுள்ளார். ’24’ படம் டைம் ட்ராவல் பற்றியது என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ள நிலையில் சூர்யா அடுத்து மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த படம் ‘இரும்பு கை மாயாவி’ என்ற சூப்பர்ஹீரோ பற்றிய கதை என கூறப்படுகிறது. இந்த கதையில் முதலில் கார்த்தி தான் நடிப்பதாக இருந்தது எனவும், பின்னர் சில காரணங்களால் சூர்யா அதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit