மைத்திரியிடம் பல ரகசியங்களை அம்பலப்படுத்திய ரவி கருணாநாயக்க

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போது மத்திய வங்கி பிணை முறி சம்பவம் தொடர்பில் இதுவரை வெளியாகாத பல இரகசியங்களை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய முறி சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பகிரங்கமாக கருத்து வெளியிடுவதற்கு ரவி கருணாநாயக்க தீர்மானித்துள்ளார்.

தான் நிதி அமைச்சராக செயற்பட்ட காலத்திலும், மத்திய வங்கி அல்லது அரச வங்கிகள் தனது அமைச்சின் கீழ் இயங்கவில்லை எனவும், அவ்வாறான நிறுவனங்களின் தீர்மானங்களுக்கு தான் பொறுப்பு அல்ல எனவும் ரவி குறிப்பிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கமான ஒருவரினால் நடத்தி செல்லப்படுகின்ற இணையத்தளத்தில் செவ்வி ஒன்றை வெளியிட்டு இரகசியங்களை வெளியிடுவதற்கான ஆரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“நான் தவறு செய்யவில்லை. அதன் காரணமாக மக்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள். அன்று மக்கள் மீண்டும் என்னுடன் இணைவார்கள். இந்த நிலைமைகளுக்கு மத்தியில் முறி மோசடி தொடர்பில் தனக்கு எதிராக அனைவரும் கை நீட்டினாலும், உண்மை என்ன என்பது விரைவில் வெளியாகும். அப்போது உண்மை என்ன என்று மக்களுக்கு தெரிய வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*