சோனி ஸ்மார்ட்போன்கள்: அடுத்த ஆண்டின் அசத்தலான அம்சம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சோனி ஸ்மார்ட்போன்களில் தற்போதைய டிரென்ட் செட்டிங் டிஸ்ப்ளே (Trend Setting Display ) வழங்கப்படும் என்று சமீபத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் பெசல்-லெஸ்(Bezel-less) மற்றும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே (Full Screen Display) போன்றவை உள்ளது.

பல்வேறு நிறுவனங்கள் புதிய வழக்கத்தை பின்பற்றத் துவங்கிய நிலையில் சோனி நிறுவனம் பெரிய பெசல்கள் நிறைந்த சாதனத்தையே வெளியிட்டது.

எனினும் இந்த வழக்கம் விரைவில் மாற்றப்பட்டு அடுத்த ஆண்டில் சோனி வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களில் பெசல் லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று சில தகவல் வெளியாகியுள்ளது.

தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி 2018-ம் ஆண்டில் வெளியாக இருக்கும் இரண்டு எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களில் பெசல்-லெஸ் டிரென்ட் பின்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மெல்லிய பெசல்கள் கொண்ட எக்ஸ்பீரியா ஃபிளாக்ஷிப்(Xperia Flagship) மற்றும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்களில் Full Screen Display மற்றும் Xperia Flagship மாடலில் கூர்மையான முனைகள் ஆகியவை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனுடன் முன்பக்கம் டூயல் ஸ்பீக்கர், டூயல் பிரைமரி கேமரா மற்றும் 4K தரம் கொண்ட டிஸ்ப்ளே, 6 GB ரேம், 128 GB இன்டெர்னல் மெமரி மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் ஆகியவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் பட்ஜெட் ரக எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு மற்றும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் ஆகிய அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் புதிய ஸ்மார்ட்போன்கள் குறித்து சோனி நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*