மகனின் பிறந்தநாளுக்கு 4 மில்லியன் டொலர் செலவு செய்த தந்தை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவில் Thomas J. Henry என்ற வழக்கறிஞர் தனது மகனின் 18 வது பிறந்தநாளுக்கு 4 மில்லியன் டொலர் செலவு செய்துள்ளார்.

ஜேர்மனியை பிறப்பிடமாக கொண்ட தாமஸ் இராணுவத்தில் பணியாற்றிய தனது தந்தையின் ஓய்வுக்கு பின்னர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் குடியேறினார். அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்த இவர் புகழ்பெற்ற வழக்கறிஞராக தற்போது இருக்கிறார்.

அதுமட்டுமின்றி இவர், அந்நாட்டில் பில்லியனர் ஆவார். இவருக்கு Thomas Henry Jr. மகனும், Maya Henry என்ற மகளும் உள்ளனர்.

625-0-560-350-160-300-053-800-668-160-90-1
இவரது மகன் இன்று 18 வது பிறந்தநாளில் அடியெடுத்துவைத்துள்ளார். இவர் தனது மகனின் பிறந்தநாளுக்கு 4 மில்லியன் டொலர் செலவு செய்துள்ளார். பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில், அமெரிக்க நட்சத்திரங்களான Rumer Willis, Ashanti, Joanna Krupa, Lance Bass ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாப் பாடகர்கள், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன, அதுமட்டுமின்றி பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு சுவையாக விருந்து பரிமாறப்பட்டுள்ளது.

சுமார், 600 பேர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். ஹென்றிக்கு பிறந்தநாள் பரிசாக Ferrari 488 Spyder கார் மற்றும் 200,000 டொலர் மதிப்புள்ள IWC Portugieser Tourbillon கைக்கடிகாரம் பரிசாக வழங்கியுள்ளார் இவரது தந்தை.

இதுகுறித்து ஹென்றி கூறியதாவது, எனது 18 வது பிறந்தநாள் இவ்வாறு பிரமாண்டமாக கொண்டாடப்படும் என நான் எதிர்பார்க்கப்படவில்லை, இந்த கொண்டாட்டம் எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது, இதற்காக நான் எனது தந்தைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*