அனுமதியின்றி திருகோணமலையில் தமிழ் மன்னனின் சிலை! சிங்கள ஊடகம் குற்றச்சாட்டு

பிறப்பு : - இறப்பு :

அனுமதி எதுவுமின்றி திருகோணமலையில் தமிழ் மன்னனின் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்த தமிழ் மன்னன் எனக் குறிப்பிட்டு குளன் கோட்டான் மன்னனின் சிலை திருகோணமலையில் நிறுவப்பட்டுள்ளது.

திருகோணமலை குளன் கோட்டான் வித்தியாலத்தில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலையை நிறுவுவதற்கு அரசாங்கத்தினதோ அல்லது கல்வி அதிகாரிகளிடமோ அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன், கல்விப் பணிப்பாளர் செல்வநாதன், பிரதேச செயலாளர் ஸ்ரீபாதி, பிரதேச சபை செயலாளர் எஸ்.யாழனி உள்ளிட்டவர்கள் இந்த சிலை அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் பாண்டிய மன்னனின் சிலை நிறுவப்பட்டிருந்தது என திவயின சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit