கிந்­தோட்டை கலவரம் 3 வாரங்­க­ளா­கியும் நஷ்­ட­யீடு இல்லை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்டு மூன்று வாரங்கள் கடந்­து­விட்ட போதிலும் இது­வரை நஷ்­ட­யீடு வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

இந்த வன்­முறைச் சம்­ப­வங்­களில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான சுமார் 80 க்கும் மேற்­பட்ட வீடுகள் பாரிய மற்றும் சிறி­ய­ள­வி­லான சேதங்­களை எதிர்­கொண்­டுள்ள போதிலும் அவற்றின் மதிப்­பீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு கிராம சேவை­யா­ளர்­களோ தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­தர்­களோ இது­வரை வருகை தர­வில்லை என பாதிக்­கப்­பட்ட மக்கள் ‘விடி­வெள்ளி’க்குத் தெரி­வித்­தனர்.

கிந்­தோட்­டையில் வன்­மு­றைகள் கார­ண­மாக 81 வீடு­களும் 18 வர்த்­தக நிலை­யங்­களும் சேத­ம­டைந்­துள்­ளன. மேலும் 6 முச்­சக்­கர வண்­டி­களும் ஒரு லொறியும் வேன் ஒன்றும் 8 மோட்டார் சைக்­கிள்­களும் தாக்­கியும் எரித்தும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நான்கு பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ள­துடன் 8 திருட்டு சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­ப­ரங்­களில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

கிந்­தோட்டை அசம்­பா­வி­தங்­களின் பின்னர் அங்கு விஜயம் செய்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு அதி­கா­ரி­க­ளுக்குப் பணிப்­புரை விடுத்­தி­ருந்தார். அதே­போன்று ஏனைய முஸ்லிம் அமைச்­சர்­களும் நஷ்­ட­ஈடு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர்.

எனினும் குறித்த வீடு­க­ளுக்கு இது­வரை கிராம சேவை­யா­ளர்­களோ அல்­லது தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­தர்­களோ வருகை தந்து சேத விப­ரங்­களை நேரில் கண்­ட­றிந்து மதிப்­பீ­டு­களை மேற்­கொள்­ள­வில்லை என மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

இதன் கார­ண­மாக உடைக்­கப்­பட்ட வீடு­களை தொடர்ந்தும் அவ்­வாறே பேண வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இதன்­கா­ர­ண­மாக தாம் பாது­காப்­பற்ற சூழலை எதிர்­கொண்­டுள்­ள­தா­கவும் ரணமாக தாம் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும் கிந்தோட்டை மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*