பசிலால் கூட்டு எதிரணிக்குள் குழப்பம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணிக்­குள் பசில் ராஜ­பக்­ச­வின் ஆதிக்­கம் கோலோச்­சி­யுள்­ள­தால் மகிந்த அணி­யான கூட்டு எதி­ர­ணிக்­குள் பெரும் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது என்று அறி­ய­மு­டி­கின்­றது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யில் இருந்து பிரிந்­துள்ள மகிந்த ராஜ­பக்­ச­வுக்­குச் சார்­பா­ன கட்­சி­கள், உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் தாமரை மொட்டு சின்­னத்­திலேயே களம் கா­ண­வுள்­ளன.

தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை பசில் ராஜ­பக்ச தன்­னிச்­சை­யான முறை­யில் செய்­து­வ­ரு­கி­றார் என்­றும், பங்­கா­ளிக் கட்­சி­க­ளு­டன் ஆலோ­ச­னை பெறா­ம­லேயே வேட்­பு­மனு இறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­றும் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப் ­பட்­டுள்ளது.

இதன்­கா­ர­ண­மா­கவே தினேஸ் குண­வர்­தன, விமல்­வீ­ர­ வன்ச, வாசு­தேவ நாண­யக்­கார, உத­ய­கம்­மன்­பில ஆகி­யோர் கடும் அதி­ருப்­தி­யில் இருக்­கின்­ற­னர் என்­றும், கூட்­ட­ணிக் ­குள் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இந்த மோத­லின் வெளிப்­பா­டா­கவே அரச தலை­வர் தலை­மை­யில் நடை­பெற்ற ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­ யின் நிறைவேற்­றுக் ­குழுக் கூட்­டத்­தில் தினேஸ் குண­வர்­தன பங்­கேற்­றார் என­வும், பது­ளைக் கூட்­டத்தை விமல் வீர­வன்ச புறக்­க­ணித்­தார் என­வும் கூறப்­ப­டு­கின்­றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*