
சவுதி செவிலியர் ஒருவர் தவறான விரல் சைகை செய்த வீடியோ வெளியான நிலையில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
الصحة السعودية «توقف» مواطنة سعودية تعمل ممرضة في مستشفى عسير وتحيلها للتحقيق «إثر» نشرها مقطع فيديو وصفته الصحة بالمخل بشرف المهنة.
.#السعودية #عسير pic.twitter.com/GiAOmTroT8— الصـباح (@assabah_news) December 5, 2017
இது குறித்த செய்தியை சவுதி பத்திரிக்கையான Sabq வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் பெயர் வெளிவராத பெண்ணொருவரின் வீடியோ இணையத்தில் வெளியானது.
பர்தா அணிந்திருந்த நிலையில் இருந்த அவர் வீடியோவில் தவறான விரல் சைகை காட்டியுள்ளார்.
வீடியோ வைரலானதை தொடர்ந்து சவுதியின சுகாதார விவகாரங்களின் பொது இயக்குநர் செவிலியரை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது.
நாட்டின் ஊழியர் ஒழுக்க குறியீடு சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பல இணைய பயன்பாட்டாளர்கள் குறித்த செவிலியர் தண்டனைக்கு தகுதியானவர் எனவும், பலர் அதற்கு எதிர்மாறாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.