ட்ரம்ப் அறிவித்திருப்பதற்கு முரணாக இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவு !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பதற்கு முரணாக இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார். மேலும், ஜெருசலேமிற்கு அதிகாரப்பூர்வமாக இந்த அங்கீகாரத்தை வழங்க இதுவே சரியான நேரம் என்றும் நிதர்சனமான உண்மைக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமே இது என்றும் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

இத்துடன், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேலுக்கு மாற்றவும் ட்ர்ம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். “அமெரிக்க அதிபர்களாக இருந்த பலர் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிப்பதாக உறுதி கூறியுள்ளனர். ஆனால், ட்ரம்ப் அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறார். இதனால், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதிப் பேச்சு பாதிக்கப்படாது என்றே டரம்ப் கருதுகிறார்.” என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், “பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு சுதந்திரமானது மற்றும் தொடர்ச்சியானது. இது சொந்தமான பார்வையாலும் ஈடுபாட்டாலும் ஆனது. மூன்றாம் நபரின் தலையீட்டால் நிர்ணயிக்கப்படுவது அல்ல.” என்று கூறியுள்ளார்.

1967ஆம் ஆண்டு நிகழ்ந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போரில் இஸ்ரேல் பாலஸ்தீனத்திடம் இருந்து கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றியது. இதற்குப் பின் அங்கு லட்சக்கணக்கான யூதர்களை குடி அமர்த்தியதுடன் ஜெருசலேமை தங்கள் தலைநகரமாகவும் இஸ்ரேல் அறிவித்துக்கொண்டது. ஆனால், சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த சுய தம்பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இச்சூழலில் ட்ரம்ப் திடீரென இஸ்ரேலின் தலைநகரம் ஜெருசலேம் என்று ஒப்புக்கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ட்ரம்ப்பின் இந்த கலகக்குரல் இஸ்லாமிய நாடுகளிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. பல்லாண்டுகளாக நீடிக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை ட்ரம்ப்பின் அறிவிப்பு சீர் குலைக்கும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*