கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்ட இருதய சத்திர சிகிச்சை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சையானது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின், இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் பிரிவுகள் இரண்டும் நவீனமயப்படுத்தப்படவுள்ளமையாலேயே இவ்வாறு இருதய சத்திர சிகிச்சையானது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய வைத்தியசாலையிலுள்ள நோயாளர்கள் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு இருதய சத்திர சிகிச்சைக்காக இடம்மாற்றப்பட்டுள்ளனர்.

திருப்தியற்ற இந்த நடவடிக்கை காரணமாக, அவரச சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளர்களுக்கு அரசின் செலவில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள, தனியார் வைத்தியசாலைகளில் இவர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோய் பிரிவில் சத்திரசிகிச்சை பிரிவை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை, வெகுவிரைவில் மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*