அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 12 பில்லியன் ரூபா

பிறப்பு : - இறப்பு :

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 29ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால், 130 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால், ஐயாயிரத்து 500 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. வரட்சி காரணமாக இதே காலப்பகுதியில் 117 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல அதிகாரிகளுக்கும் இம்மாதம் 31ஆம் திகதி கொடுப்பனவுகள் வழங்கப்படவிருக்கின்றன. ஒதுக்கப்பட்ட தொகை இரண்டாயிரத்து 853 கோடி ரூபாவாகும்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கென மேலதிகமாக 12 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது எனவும் அமைச்சர் விஜிர அபேவர்தன கூறினார்.

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 15ஆவது நாள் இன்றாகும். உள்நாட்டு அலுவல்கள், அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி இன்று விவாதிக்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit