டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே நகர் தொகுதிக்கு பொது விடுமுறை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

rk-nagar

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி அந்தத் தொகுதிக்கு டிசம்பர் 21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவரின் தொகுதியான ஆர்கே நகருக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

தமிழக அரசியல் சூழலில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஆர்கே நகர் தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் டிசம்பர் 21 ஆம் தேதி அந்தத் தொகுதிக்குப் பொது விடுமுறை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit