திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு .! சிசிடிவி கேமராவில் சிக்கிகொண்ட ரவுடி கும்பல்!

பிறப்பு : - இறப்பு :

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்து உள்ள பெருமநாட்டு நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் ஊராட்சிமன்றத் தலைவர் ரவி.

இவர் கட்டான்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களாக லட்சம் பணம்கேட்டு சூர்யா என்ற ரவுடி மிரட்டி வந்துள்ளார்.

அதற்கு ரவி பணம் கொடுக்க முடியாது என மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ரவி வீட்டுக்கு அவரது தம்பி வந்துள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்த சூர்யா உட்பட மூன்று ரவுடிகள் திடீரென அவர் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுடை வீசினர்.

இதில் ரவியின் தம்பி படுகாயம் அடைந்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பத்தினர் ஓடி வந்ததால் அந்த கும்பல் தப்பித்துவிட்டனர்.

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கேமராவை ஆய்வு செய்த போது ரவுடிகளின் முகம் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் கடந்த ஆண்டும் ரவிக்கு கொலை மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடதக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit