நாளொன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் இளைஞர்: சோகமான காரணம்

பிறப்பு : - இறப்பு :

ஜேர்மனியில் விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தினமும் 20 லிட்டர் தண்ணீரை குடித்து வாழ்ந்து வருகிறார்.

ஜேர்மனியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் மார்க் வுப்பென்ஹார்ஸ்ட். இவர், பிறக்கும்போதே அரிய வகை வளர்சிதை மாற்ற நீரிழிவு நோயுடன் பிறந்தார். இதனால் இவருக்கு 24 மணிநேரமும் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.

தொடர்ச்சியாக தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பதால், அசாதாரண அளவில் சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கிறார். குழந்தையாக இருக்கும்போது இந்த அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை.

ஆனால், ஆண்டுகள் செல்ல இந்த நோயின் தீவிரம் அதிகமானது. அதனால், ஒரு கட்டத்தில் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானார். இவர், ஒரு நளைக்குக் குறைந்தது 20 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

இல்லையெனில், அவரது உடல் நீர்ச்சத்தை முழுவதுமாக இழந்து, மரணம் ஏற்பட்டுவிடும். சாதாரண மனிதர்களால் 2 தம்ளர் தண்ணீர் குடித்தாலே, பல மணிநேரங்களுக்கு தாக்கு பிடிக்க முடியும்.

ஆனால், மார்க்கின் சிறுநீரகம் மிக வேகமாக நீரை வெளியேற்றி விடுவதால், ஒரு மணிநேரம் தண்ணீர் குடிக்காவிட்டாலும் உடலானது நீர்ச்சத்தை இழக்கும். உதடுகள் வெடிக்க ஆரம்பிக்கும், தலைச்சுற்றல் ஏற்படும்.

35 வயதாகும் மார்க் வுப்பென்ஹார்ஸ்ட் இது குறித்து கூறுகையில், ‘என்னால் மன அழுத்தத்துடனும், நோயுடனும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனது. ஒவ்வொரு நாளும் போராட்டமாக மாறியது.

நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதும், சிறுநீர் கழிப்பதும் மட்டுமே வாழ்க்கை என்றால், அது எவ்வளவு கொடுமையாக இருக்கும். அதுவும் இரவு மிகவும் கொடுமையாக இருக்கும்.

என்னால் 2 மணி நேரங்களுக்கு மேல் தூங்க முடியாது. ஒரு நாளைக்கு 50 தடவை சிறுநீர் கழிக்கச் செல்கிறேன். ஒரு கட்டத்தில் நானே என் மன அழுத்தத்தை புரிந்து கொண்டு அதிலிருந்து மீண்டேன்.

வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பது சலிப்பை ஏற்படுத்துவதால், எலுமிச்சைச்சாறு, தேயிலை, மூலிகை என எதையாவது கலந்து குடிப்பேன். வெளியூர்களுக்கு செல்வதெனில், முன்கூட்டியே திட்டமிட்டு தான் செல்வேன்.

ஒருமுறை அலுவலகத்திலிருந்து தாமதமாக வீட்டுக்குக் கிளம்பினேன். தண்ணீர் பாட்டிலை மறந்துவிட்டு ரயிலில் ஏறினேன். எனினும், வீடு அருகில் தான் என்பதால் பயமின்றி அமர்ந்திருந்தேன். ஆனால், ரயிலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு பாதியிலேயே நின்றுவிட்டது.

நீண்ட நேரமானதால், என் உடல் தளர்ந்தது. அப்படியே மயங்கி விட்டேன். என் நண்பர் ஒருவர், எனக்கு தண்ணீர் கொடுத்து என்னைக் காப்பாற்றினார். நீரிழிவு என்பதால் என்னால் பழச்சாறுகள் மற்றும் குளிர்பானங்களை குடிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit