டெல்லி டெஸ்ட்டில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ஒட்டங்கள் குவித்த இலங்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 356 ஒட்டங்கள் எடுத்துள்ளது.

டெல்லியின் கோட்லா மைதானத்தில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 536 ஒட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ஒட்டங்கள் எடுத்தது.

இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தினை தொடங்கிய இலங்கை அணியின் மேத்யூஸும், சண்டிமலும் நிலைத்து நின்று ஆடி சதமடித்தனர். மேத்யூஸ் 111 ஒட்டங்களில் வெளியேற, இலங்கையின் மற்ற விக்கெட்டுகளும் சரியத் தொடங்கியது.

சமரவிக்ரமா மட்டும் 33 ஒட்டங்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். எனினும், தினேஷ் சண்டிமல் மட்டும் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடினார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 130 ஒவர்களில் 9 விக்கெட்டுக்கு 356 ஒட்டங்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில்,

அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, இஷாந்த ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இலங்கை அணி, இந்தியாவை விட 180 ஒட்டங்கள் பின் தங்கியுள்ளது.

தினேஷ் சண்டிமல் 147 ஒட்டங்களுடனும், சந்தகன் ஒட்டங்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*