ஊழல் வழக்கில் சிக்கிய சவுதி இளவரசர்களுக்கு பேரிடி: மேலும் பல ஆதாரங்கள் சிக்கியது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் கைதான 201 இளவரசர்கள் தொடர்பில் மேலும் பல ஆதாரங்களை சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் செல்வாக்கு மிகுந்த 11 இளவரசர்கள் உள்ளிட்ட 201 பேர் கைதாகினர்.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அதிரடி நடவடிக்கையால் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மட்டுமின்றி தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் சுமார் 1,700 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் கடந்த பல ஆண்டுகளாக மட்டும் 100 பில்லியன் டொலர் அளவுக்கு ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சுவிஸ் வழக்கறிஞர்கள் குழு ஒன்று கோப்புத் தொகுப்பு ஒன்றை சவுதி அரசிடம் ஒப்படைத்துள்ளது. அதில் சவுதி இளவரசர்கள் மற்றும் தொழிலதிபர்களின் தகவல்கள் அடங்கியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொடர்பில் ரகசியம் காப்பது எழுதப்படாத விதியாக கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் தொடர்பில் உரிய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.

அந்தவகையில் குறித்த தகவலை சவுதி அரசிடம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் கைமாறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சவுதி அரசு இதுவரை நடவடிக்கை எதையும் துவங்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

கைதான சில இளவரசர்கள் பெயரில் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி கடந்த 30 அல்லது 50 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் இருந்து என்ணிக்கையற்ற அளவிலான பணத்தை ஆஸ்திரியா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, ஸ்லோவேனியா, மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 8 நாடுகளில் பதுக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*