அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸா? உலகமே ஏமாந்து கொண்டிருக்கும் உண்மைகள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்று இன்றும் பலர் நம்புகின்றனர். ஆனால் அவரைப் பற்றி இன்றளவும் உலகமே ஏமாந்து கொண்டிருக்கும் உண்மைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

  • கொலம்பஸ்தான் புதிய உலகை கண்ட முதல் ஐரோப்பியர் என பலரும் பெருமையாக கருதுகிறார்கள். ஆனால் இவர் கண்டுபிடிப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவை வேறொரு ஐரோப்பிய பயணி கண்டுபிடித்துவிட்டார்.
  • இவரை அனைவரும் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று தான் கருதுகிறார்கள், ஆனால் அவரின் உண்மையான பெயர் க்றிஸ்டோபோரோ கொலம்போ என்பது எத்தனை பெருக்கு தெரியும்.
  • பெரும்பாலும் கொலம்பஸ் மேற்கொண்ட பல பயணங்கள் அழிவில் தான் முடிந்துள்ளன. உதாரணமாக கூற வேண்டும் எனில், கொலம்பஸ் ஒரு முறை ஸ்பெயினில் இருந்து பல விலைமதிப்பற்ற பொருட்களோடு, புதிய பாதையில் துவக்கிய பயணம், ஒரு விபத்தால் வெறும் கையோடு நாடு திரும்பும் நிலையை உண்டாக்கியது.
  • ஸ்பெயின் அரசர் கொலம்பஸ்-ஐ சாண்டோ-டோமிங்கோ என்ற பகுதிக்கு கவர்னராக நியமித்தார். அப்போது கொலம்பஸோ இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவரது சகோதரருடன் இணைந்து பெரும் லாபங்களை எடுத்துக் கொண்டு ஸ்பெயின் அரசரை ஏமாற்றினார். இதை அறிந்த அரசர் உடனடியாக அவரின் நியமனத்தை நிராகரித்து, புதிய கவர்னரை அறிவித்தார்.
  • கொலம்பாஸ் மதச்சார்புடைய நபராக தான் திகழ்ந்தார், இவரது பயணங்களில் கண்டுபிடித்த இடங்களுக்கு மதம் சார்ந்த பெயர்களையே இவர் சூட்டினார்.
  • முக்கியமாக கொலம்பஸ் என்றால், அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என்று தான் பலர் கூறுகின்றனர், ஆனால் அவரோ வட அமெரிக்காவில் கால் பதிக்கவே இல்லை, இதைத் தொடர்ந்து இந்தியா என்று கருதி அவர் கால் பதித்த இடம் கரீபியனைச் சேர்ந்த பஹமாஸ் தீவு ஆகும்.
  • மேலும் இவர், 1492-களில் புதிய உலக பயணத்தின் போது, நான் இடங்களை பார்த்தார், முதலில் கரீபியன் தீவு, அடுத்து தென் அமெரிக்கா, அதன் பின் செண்ட்ரல் அமெரிக்காவை கண்டுபிடித்தார்.
  • புதிய உலகில் கால் பாதித்த முதல் ஐரோப்பியர் கொலம்பஸ் என பலரும் கருதுகின்றனர், ஆனால் ஏறத்தாழ 1000 கி.பி லெய்ப் எரிக்ஸன் என்பவர் அமெரிக்காவை அடைந்துவிட்டார்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*