வெடித்துச் சிதறிய விமான இயந்திரம்: அலறிய விமான பயணிகள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கியூபாவில் இருந்து பிரித்தானியா புறப்பட்ட தாமஸ் குக் விமானத்தின் இயந்திரம் வெடித்துச் சிதறியதில் அதில் இருந்த பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

கியூபாவின் Holguin விமான நிலையத்தில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தாமஸ் குக் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து மெதுவாக கிளம்பி வேகமெடுத்து பறக்கவும், திடீரென்று பயங்கர சத்தத்துடன் விமான இயந்திரம் வெடித்துச் சிதரியுள்ளது.

இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த விமானம் உடனடியாக கீழிறங்கியதாகவும், அதே நேரத்தில் இயந்திரம் தீப்பற்றி எரிந்ததாகவும் பயணிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இயந்திரத்தில் பற்றிய தீயின் பொறி குறித்த விமானத்தின் பின்னிருக்கை வரை பரவியதாகவும் பயணிகள் அச்சமுடன் தெரிவித்துள்ளனர்.

வினாம புறப்படும் முன்னரே பயங்கரமாக குங்குங்கியதாகவும் அதன் பின்னரே பயங்கர சத்தமுடன் விமான இயந்திரம் வெடித்துச் சிதரியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விமானம் கரும்புகையால சூழப்பட்டதாகவும் உள்ளிருந்த பயணிகள் அலறியப்படி காப்பாற்ற கோரி கூச்சலிட்டதாகவும் 64 வயது பயணி ஒருவர் பதற்றம் விலகாமல் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தால் நிலைதடுமாறிய விமானி அந்த விமானத்தை தரையிறக்க மிகவும் சிரமப்பட்டதாகவும், குறித்த விமானத்தில் இருந்த எவரும் உயிருடன் இருப்பதே அதிர்ஷ்டம் எனவும் 41 வயதான பயணி ஒருவர் கூறியுள்ளார்.

மட்டுமின்றி விபத்துக்கு பின்னரும் தாமஸ் குக் நிர்வாகிகளின் செயல்பாடுகள் தங்களுக்கு திருப்தியாக இல்லை எனவும், மாற்று விமானத்தை ஏற்பாடு செய்ய சுமார் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும் பெரும்பாலான பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நவம்பர் 27-ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தில் இருந்த 300 பயணிகளுக்கும் தலா 600 யூரோ இழப்பீடாக தாமஸ் குக் நிறுவனம் வழங்கியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*