மீண்டும் இரட்டை சதம்: லாராவின் சாதனையை தட்டிப்பறித்த விராட் கோஹ்லி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி தனது 6வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வரும் இந்தியா ஆரம்பம் முதலே ஓட்டங்களை குவித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு500 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அணித் தலைவர் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்துள்ளார்.

இந்த ஆண்டில் கோஹ்லி அடித்துள்ள 5வது இரட்டை சதம் இதுவாகும். இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற போட்டியிலும் அவர் இரட்டை சதமடித்திருந்தார்.

இதன் மூலம் தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் குறைந்தது ஒரு இரட்டை சதமாவது அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வழிநடத்திய தலைவர்கள் மொத்தமாக 4 இரட்டை சதங்கள் மட்டுமே அடித்துள்ள நிலையில் கோஹ்லி 6 சதங்கள் விளாசியுள்ளார்.

மேலும் அணித்தலைவராக அதிக இரட்டை சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் லாராவிடம் இருந்து கோஹ்லி தட்டிப்பறித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*