சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த அகதி சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கனடாவில் ஒன்பது வயது சிறுமி சாலையோரம் நின்றிருந்த போது, பேருந்து மோதியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hala என்னும் ஒன்பது வயதான சிறுமியின் குடும்பம், ஓர் ஆண்டுக்கு முன்னர் சிரியாவில் இருந்து அகதியாய் கனடாவில் குடியேறியுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று குறித்த சிறுமி, Abbotsford பகுதியில் உள்ள தனது பள்ளிக்கு அருகில், சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்து, சிறுமியின் மீது பலமாக மோதியது.

பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Hala சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பள்ளியில் கேட்டபோது,

பாதுகாவலர் ஒருவர் எப்போதும் குழந்தைகளுக்கு சாலையை கடக்க உதவியாய் அங்கு இருப்பார்.

ஆனால், சிறுமி விபத்துக்குள்ளான அச்சமயம், துரதிஷ்டவசமாக பாதுகாவலர் எவரும் இல்லை என தெரிவித்தனர்.

சிறுமி குறித்து அவளின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூறுகையில், அவள் மிகவும் நற்குணம் கொண்டவள், மனதில் தோன்றியதை தைரியமாக பேசுபவள் என தெரிவித்தனர்.

காவல்துறையினரும், போக்குவரத்து துறையினரும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*