கூகுளில் வேலை வேண்டும்; அடம்பிடித்த 7 வயது சிறுமி; சுந்தர் பிச்சை என்ன சொன்னார் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கூகுளில் வேலை கேட்ட சிறுமிக்கு, சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார்.

இணைய உலகின் கொடி கட்டிப் பறக்கும் ராஜாவாக கூகுள் திகழ்கிறது. கூகுள் இன்றி ஓரணுவும் அசையாது என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் அழுத்தமாக பதிந்து விட்டது. அத்தகைய நிறுவனத்தில் வேலை பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அதற்கென நடத்தப்படும் நேர்காணலில், மிகவும் கடினமான சுற்றுகளில் பங்கேற்று, அதில் வெற்றி கண்ட பிறகே, வேலை பெற முடியும். அப்படி கிடைத்துவிட்டால் கோடிகளில் புரளலாம்.

இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி க்ளோயி பிரிட்ஜ், கூகுளில் தனக்கு வேலை வேண்டும் என்று அதன் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சிறுபிள்ளைத் தனமாக இருந்தாலும், சிறுமியின் ஆர்வத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.

6190438261904383
அதனை செய்ய கூகுள் தலைமை செயல் அதிகாரியான தமிழர் சுந்தர் பிச்சை தவறவில்லை. சிறுமிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், உனக்கு கம்யூட்டரும், ரோபோவும் பிடிக்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

தொழில்நுட்ப படிப்பை தேர்வு செய்து படிக்கவும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். உனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, கடிதம் குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*