மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்து கொடுமை: தாயின் மறுமுகம் அம்பலம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70-33

இந்தியாவில் சொந்த மகளையே அவரது தாய் சூடான தோசைக்கல்லில் அமர வைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த தம்பதி லலிதா-பிரகாஷ். லலிதாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்ததால், முதல் கணவர் மூலம் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. தற்போது அக்குழந்தைக்கு 4 வயதாகிறது.

இந்நிலையில் லலிதாவும், பிரகாசும் ஐதராபாத்தில் உள்ள ஒரு விடுதியில் வேலை பார்த்து வருகின்றனர். இருந்த போதிலும் இருவரும் அந்த சிறுமியை வெறுத்து ஒதுக்கினர்.

ஒரு கட்டத்தில் லலிதாவின் செயல் எல்லை மீறிச் சென்றுள்ளது. லலிதா சமையல் செய்து கொண்டிருந்தபோது, பெற்ற மகள் என்றும் பாராமல், அச்சிறுமியை சூடான தோசைக்கல்லில் தூக்கி உட்கார வைத்துள்ளார். இதனால் அவருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் இதை மறைப்பதற்கு சாலை ஓரத்தில் இந்த சிறுமி கிடந்தால் என்று கூறி, அங்கிருக்கும் குழந்தைகளுக்கான ஆதரவு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது, அவர் சிறுமியை சித்ரவதை செய்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லலிதா, பிரகாஷ் ஆகியோரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit