சு.கட்சிக்கு சமாதானம் தேவையா என்பதனை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்: மஹிந்த

பிறப்பு : - இறப்பு :

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சமாதானம் தேவையா என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் அண்மையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சிக்கு சமாதானம் தேவையா என்பதனை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவுகளைப் பேணி வரும் சுதந்திரக் கட்சியின் எந்தவொரு விடயத்திலும் பங்கேற்கப் போவதில்லை.

மைத்திரி ஆதரவாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கும் வரையில் சமாதானம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவியை துறக்க வேண்டும் அல்லது வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனைகளில் ஒன்றை நிச்சயமாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே கூட்டு எதிர்க்கட்சி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளும்.

தற்போது பந்து அவர்களின் பக்கம் எறியப்பட்டுள்ளது, அதனை எவ்வாறு விளையாடுவது என்பதனை மைத்திரி தரப்பே தீர்மானிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit