டளஸ் மற்றும் மகிந்தானந்த ஆகியோரை பொறுப்புக்களில் இருந்து நீக்கிய பசில்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாடாளுமன்ற உறுப்பினர்கள் டளஸ் அழகப்பெரும மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு கூட்டு எதிர்க்கட்சிக்குள் வழங்கப்பட்டிருந்த கடமைகளில் இருந்து அவர்களை உடனடியாக நீக்க, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டளஸ் அழகப்பெரும மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த கூட்டு எதிர்க்கட்சிக்குள் போராட்டங்களை நடத்திய இருவர் என கருதப்படுவதுடன் இதுவே பசில் ராஜபக்சவின் மேற்படி நடவடிக்கைக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனடிப்படையில் டளஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப்பட்டிருந்த பிரசாரப் பணிகளை பொறுப்பேற்குமாறு பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் கேட்டுள்ளார். எனினும் கம்மன்பில அதனை தயவுடன் மறுத்துள்ளார்.

அத்துடன் மகிந்தானந்த அளுத்கமகே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியமான தொடர்பை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச, நம்பிக்கையான பொறுப்புகளை அவரிடம் வழங்க வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*