போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞன் பொலிஸாரால் கைது !

பிறப்பு : - இறப்பு :

களனி – திப்பிட்டிகொட பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேலியகொடை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த இளைஞர் சிக்கியுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 4.440 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் களனி பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit