
சமீபத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையின் வெற்றியைத் தொடர்ந்து வடகொரியா மக்கள் மற்றும் இராணுவத்தினர் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
வடகொரியா சமீபத்தில் Hwasong-15 என்ற ஏவுகணை சோதனை செய்தது, இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக, வடகொரியா சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி இந்த ஏவுகணையானது அமெரிக்கா முழுமையும் சென்று தாக்க வல்ல சக்தி கொண்டது எனவும் பிரித்தானியாவின் முக்கிய பகுதிகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தலைநகர் ப்யாங்யாங்கில் உள்ள சதுக்கத்தில் திரண்டு இராணுவமும், மக்களும் வெற்றியை கொண்டாடினர்.
பட்டாசுகள், வாண வேடிக்கைகள் கொளுத்தியும், வீதிகளில் உற்சாக நடனமாடியும் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் இராணுவ உயர் அதிகாரிகள், முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்ட போதும், ஜனாதிபதி கிம் ஜோங் உன் கலந்து கொள்ளவில்லை. கொண்டாட்டத்தின் போது ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை வாழ்த்தி மக்கள் முழக்கமிட்டனர்.