டயானாவின் நகைகளிலிருந்து தனது காதலிக்கு மோதிரம் வடிவமைத்த இளவரசர் ஹரி

பிறப்பு : - இறப்பு :

பிரித்தானிய இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகை மெர்க்கலும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

தற்போது, இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.

மெர்க்கலுக்கு ஹரி அளித்த மோதிரத்தில் இருக்கும் கல், டயானாவின் நகைகளிலிருந்து எடுக்கப்பட்டது. அந்த மோதிரத்தை ஹரியே வடிவமைத்துள்ளார்.

மறைந்த தன் அம்மா டயானாவின் ஆசிர்வாதம் இருவருக்கும் வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இது என்று கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் முடிவடைந்துவிட்ட நிலையில், நேற்று நடைபெற்ற தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர். அப்போது, ரசிகர்கள் ஹரியை பார்த்து, மெர்க்கலுடன் காதல் எப்படி இருக்கிறது? இதனை நம்பமுடியவில்லை என்றெல்லொம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு சிரித்துக்கொண்டே, ஆமாம் நம்பமுடியவில்லை, நன்றாக இருக்கிறது என பதிலளித்துவிட்டு சென்றுள்ளார்.

மேகன் மெர்க்கலுக்கு திருமணத்துக்கான விசா, மே மாதம் முடிவடைவதால், அதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும். முதல் இளவரசர் வில்லியம்க்கு ஏப்ரல் மாதம் குழந்தை பிறக்க இருப்பதால், மே மாதம் திருமணம் என முடிவுசெய்துள்ளார்கள்.

கூடிய விரைவில் திருமண தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit