119 பாம்புகள்.. அசத்தும் கேரள பெண்!

பிறப்பு : - இறப்பு :

கேரளாவில் ராஜி என்னும் பெண்மணி ஆண்களை காட்டிலும் பயமின்றி பாம்புகளை பிடிக்கிறார்.

கேரள மாநிலம் பாலோட்டில் உள்ள நன்னியோட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.ராஜி.

தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர், பாம்புகள் பிடிப்பதை சேவையாக செய்து வருகிறார்.

கடந்த 9 மாதங்களில் மட்டும் 119 பாம்புகளை திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் பிடித்து, வனப்பகுதியில் விட்டுள்ளார்.

தங்கள் வீட்டிற்குள் பாம்புகள் புகுந்து விட்டால், மக்கள் இவரை தொடர்பு கொண்டு அழைக்கின்றனர், இரவு நேரத்தில் தன் கணவருடன் சென்று இலாவகமாக பாம்புகளை பிடித்து விடுகிறார் ராஜி.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பாம்புகளை பிடிக்க பணம் கேட்பதில்லை, சிலர் நன்கொடையாக அளித்தால், நான் அதை ஏற்கிறேன், ஆனால் பேரம் பேசுவது இல்லை.

ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு பணம் கூட வாங்குவதில்லை, 100க்கும் மேற்பட்ட பாம்புகள் ஆபத்தை உண்டாக்கியிருக்கின்றன, ஆனால் எந்த பாம்பும் கடிக்கவில்லை.

மக்களுக்கு உதவி செய்வதற்காகவே பாம்பு பிடிப்பதை ஒரு சேவையாக செய்கிறேன், வாழ்க்கையை பணயம் வைத்து இதனை செய்து வருகிறேன், இதனை நான் தொடருவேன் என தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit