கண் புரை வராமல் தடுக்கும் எளிய மருத்துவம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கண்களில் உள்ள கருவிழியில் வெள்ளைப்படலம் போல தோன்றுவதே கண்புரை நோய், இது பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும்.

அதிலும் முக்கியமாக சர்க்கரை நோய் மற்றும் அதிக ரத்தம் அழுத்தம் பிரச்சனை இருந்தால் கண்களில் புரை நோய் வரும்.

அதிக புகை மற்றும் மது பழக்கம், விட்டமின் குறைபாடு, கண்ணிற்கு ஏற்படும் காயங்கள், கதிர்வீச்சுகள் போன்ற காரணத்தினால் சிலருக்கு இளமையிலே கண் புரை ஏற்படுகிறது

கண் புரை நோயை குணமாக்குவது எப்படி?
  • அன்னாசிப் பூவை பொடி செய்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, 2 டீஸ்பூன் மல்லித் தூள், ஆகிய அனைத்தையும் தண்ணீர் கலந்து தினமும் காலை, மாலை குடிக்க வேண்டும்.
  • பசலைக் கீரையை தண்ணீர் கொதிக்க வைத்து 5 நிமிடம் நன்றாக கழித்து வடிகட்டி அந்த கீரையை அரைத்து பேஸ்ட் செய்து அதை வேக வைத்த நீருடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து குடித்து வர வேண்டும்.
  • பாதாமை பாலில் ஊற வைத்து பேஸ்ட் செய்து அதை கண்களின் மீது தடவ வேண்டும் அல்லது தினமும் காலையில் வெறும் பாதாம் சாப்பிட்டு வரலாம்.
  • இளஞ்சூடான நீரில் அரைத்த பாதாம், சிறிதளவு மிளகு மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகிய மூன்றையும் கலந்து, அதை தினமும் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
  • க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும். எனவே தினமும் இரண்டு முறைகள் க்ரீன் டீ குடிக்கலாம்.
  • 1 கப் ரோஜாப்பூ இதழ்கள் மற்றும் ரசப்பெர்ரி இலைகளை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து 2 நிமிடம் கழித்து எடுத்து ஆறவைத்து அந்த நீரினால் கண்களை கழுவி வர வேண்டும்.
  • பூண்டை சிறு துண்டுகளாக வெட்டி அதை வாயில் போட்டு தண்ணீர் ஊற்றி முழுங்க வேண்டும்.
  • கேரட்டின் மேல் புறத்தோலை எடுத்து விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து அதன் சாறு எடுத்து தினமும் 2 வேளைகள் குடித்தால் கண் புரை நோயை தடுக்கலாம்.
  • இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகிய அனைத்தையும் கலந்து குடித்து வர நல்ல பலனை பெறலாம்.
  • இரவு உறங்கும் முன் தினமும் 1 டம்ளர் பாலில் 1 ஸ்பூன் ஏலக்காய் பொடி கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*