கடைசி டெஸ்ட்டில் இருந்து திரிமன்னே நீக்கம்

பிறப்பு : - இறப்பு :

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் திரிமன்னே நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இலங்கை விளையாடிய, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டிராவிலும், தோல்வியிலும் முடிந்தது.

இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நாளை தொடங்க உள்ளது. இதற்கான இலங்கை அணியில் இருந்து துடுப்பாட்ட வீரரும், அணியின் துணைத் தலைவருமான திரிமன்னே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மோசமான ஆட்டத்தின் காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக, தனஞ்ஜெயா தி சில்வா 3வது வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit