சர்ச்சைக்குரிய பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் ஓய்வு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

40 வயதாகும் சயீத் அஜ்மல், இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 184 விக்கெட்டுகளையும், 64 டி20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவரது பந்துவீச்சு முறை மிகவும் வித்யாசமானதாக இருப்பதால் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

குறிப்பாக 2014-ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இவரது பந்து வீச்சு முறையில் சந்தேகம் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகார் தெரிவித்தது.

இந்த புகாரின் காரணமாக அதற்கு பின் அவருக்கு போட்டியில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இளம் வீரர்களுக்கு வழி விடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக அஜ்மல் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சமீப காலமாக பாகிஸ்தான் அணியும், உள்ளூர் கிரிக்கெட் அணிகளும் என்னை கூடுதல் சுமையாக கருதுவது போல் உணர்கிறேன்.

என் மரியாதையை இழக்க நான் விரும்பவில்லை, எனவே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கனத்த இதயத்துடன் ஓய்வு பெறுகிறேன்.

என் பந்து வீச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சந்தேகம் எழுப்பியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனக்காக வாதடவில்லை, இது வருத்தத்தை அளிக்கிறது, நான் சரியான முறையில் பந்து வீசியதாக நம்புகிறேன் என கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*