நைஜீரியாவில் ராணுவ வீரர்களால் சீரழிக்கப்பட்ட குடும்பம்: கதறும் இளம்பெண்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nigeria-army585

நைஜீரியாவில் நாளுக்கு நாள் ராணுவத்தினரின் அட்டூழியம் அதிகரித்து வருவதாகவும் இதனால் பல குடும்பங்கள் கடும் பதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவில் ராணுவ வீரர்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்று தங்களுக்கு நேர்ந்த அவலத்தை தனியார் ஊடகம் ஒன்றிற்கு பகிர்ந்துள்ளனர்.

அதில், திடீரென்று ஒரு நாள் நள்ளிரவு கடந்த நேரம் குடியிருப்பில் உள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கதவு தட்டப்பட்டது.

என்ன ஏது என பதறியபடியே கதவை திறந்த நொடியில் மூன்று நான்கு ராணுவ வீரர்கள் உள்ளே புகுந்து, துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.

அதில் ஒரு ராணுவ வீரர் வீட்டில் இருந்த பெண்மணி ஒருவரை நெருங்கி ஆபாசமாக பேசியவாறே அவரது ஆடைகளை வலுக்கட்டாயமாக களையத் துவங்கினார்.

பதறிப்போன அவரது கணவர் அந்த ராணுவ வீரர்களிடம் கெஞ்சியதாகவும், ஆனால் அந்த ராணுவ வீரர்கள் அவரை சரமாரியா தாக்கியதுடன் துப்பாக்கியாலும் சுட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நிலைகுலைந்து சரிந்து விழுந்த தமது கணவரை தரையோடு இழுத்து சென்றதுடன், தம்மையும் அவர்களுடன் அழைத்து சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பின்னர் அவர்களது சோதனை சாவடிக்கு கொண்டு சென்றது விசாரணை என்ற பெயரில் தம்மிடம் அத்துமீறியதாகவும், ஒருகட்டத்தில் தங்கள் இருவரையும் ஒரு குழிக்குள் தள்ளி அங்கேயே இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

காலை விடியும் வரை அங்கேயே அந்த குழியிலேயே பதுங்கியிருந்த நிலையில், விடிந்ததும் தம்மை அந்த குழியில் இருந்து வெளியேற வைத்து வீட்டுக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சில மணி நேரம் கடந்த நிலையில், ஒரு ராணுவ வாகனத்தில் தமது கணவரை ஏற்றி வந்த அவர்கள், தங்களது வீட்டின் அருகாமையில் இறக்கி விட்டு சென்றுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கெனவே ராணுவ வீரர்கள் தாக்கியதில் குற்றுயிராக இருந்த அவர் இறந்த நிலையிலேயே கொண்டு வந்து சேர்த்துள்ளதாக கூறும் அந்த பெண்மணி,

இந்த விவகாரம் தொடர்பில் ராணுவத்திடம் சமூக ஆர்வலகர்கள் சார்பில் புகார் அளித்தால், ராணுவம் ஒழுங்கீனமாக நடந்ததில்லை எனவும், அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியதற்கு ஆதாரம் இல்லை எனவும் கூறி விசாரணைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit