கண்ணீர் விட்டு அழுத கனடிய பிரதமர்: வைரலாகும் வீடியோ

பிறப்பு : - இறப்பு :

கனடாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் விடயத்தில் அரசு செய்த தவறுக்காக நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

கனடாவில் வாழும் LGBTQ2 (ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள்) அரசு வேலைகள், ராணுவ பணி போன்ற பொது விடயங்களில் பல்வேறு விதமான இன்னல்களை அனுபவித்து வருவதுடன், புறக்கணிக்கப்பட்டும் வருகிறார்கள்.

இதையடுத்து இவர்களை சரியாக காக்க தவறிய கனடிய அரசு இது தொடர்பாக மன்னிப்பு கேட்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன்படி அவர் பொதுவெளியில் உருக்கமாக பேசி மன்னிப்பு கேட்டுள்ளார்.

அந்த உரையில், அரசின் முதல் வேலை நாட்டின் குடிமக்களை பாதுகாப்பது தான், ஆனால் நாங்கள் LGBTQ2 விடயத்தில் அதை செய்யாமல் தவறிவிட்டோம்.

இது அவமானம் மற்றும் வருத்தத்திற்குரிய செயலாகும், இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அரசாங்கம், பாராளுமன்றம், கனடிய மக்கள் சார்பாக மன்னிப்பு கோருகிறோம், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என கூறியுள்ளார்.

ஜஸ்டின் உரையாற்றும் போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார், இதையடுத்து கைக்குட்டையால் கண்ணீரை துடைத்த படியே தொடர்ந்து பேசினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit