தூக்கமே வரலையா? இதோ பாலோ பண்ணுங்க

பிறப்பு : - இறப்பு :

ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தூக்கத்தின் மூலம் தான் நாள் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்யும் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது.

தூக்கம் சரியான அளவில் கிடைத்தால், உடல் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை, தொழில்நுட்பம், வேலைப்பளு போன்றவைகளால் ஏராளமானோர் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர்.

இதில் படுத்த உடனேயே தூக்கத்தைப் பெற ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.

வான்கோழி அல்லது சிக்கன்

இரவில் படுக்கும் முன் சிறிது சிக்கன் அல்லது வான்கோழியை சாப்பிடுங்கள். இதில் உள்ள ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம், தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் உற்பத்தியை தூண்டி, நிம்மதியான தூக்கத்தை கிடைக்கச் செய்யும்.

பாலில் தேன்

பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இது மூளையில் மெலடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து தூக்கத்தைப் பெற உதவும். ஆகவே இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்க வேண்டுமானால், வெதுவெதுப்பான ஒரு டம்ளர் பாலில் தேன் கலந்து குடியுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ட்ரிப்டோபேன், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. எனவே இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல தூக்கத்தைக் கிடைக்கச் செய்யும்.

தயிர்

தினமும் தயிரை சாப்பிடுவதன் மூலமோ அல்லது அவ்வப்போது தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலமோ, நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

குங்குமப்பூ

குங்குமப்பூவில் உள்ள மயக்க பண்புகள், நல்ல தூக்கத்தைத் தூண்டும். அதற்கு சிறிது குங்குமப்பூவை 1 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்து குடிக்க வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit