கோஹ்லியிடம் கேள்வி கேட்ட உலக அழகி: அப்படி மட்டும் இருக்காதீங்க என அறிவுரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, உலக அழகியான மனுஷி சில்லர் கேட்ட கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்தார்.

இந்தியாவிற்கு தற்போது பெருமை சேர்த்து வருபவர் விராட் கோஹ்லி, பெருமை சேர்த்தவர் மனுஷி சில்லர் என கூறலாம், ஏனெனில் இவர் சீனாவின் சான்யா சிட்டியில், கடந்த 18-ஆம் திகதி நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்று அசத்தினார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு பெருமை இந்த இருவரும் ஒரே மேடையில் தோன்றினால் எப்படி இருக்கும், அப்படி ஒரு நிகழ்வு தான் CNN-IBN Indian of the Year 2017 விருது வழங்கும் விழாவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, உலகி அழகியான மனுஷி சில்லர்க்கு விருது வழங்கி கெளரவித்தார்.

அப்போது மனுஷி சில்லர் அவரிடம், தற்போது உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் போன்றவர்களுக்கு நீங்கள் தான் ஒரு ரோல் மாடலாக இருக்கீங்க, அதுமட்டுமில்லாமல் அவர்களும் உங்களைப் போன்று ஆக வேண்டும் என்று கூறுகின்றனர்.

அவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.

இதற்கு விராட் கோஹ்லி, நீங்கள் நீங்களாகவே இருங்கள், இவரைப் போன்று தான் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள்.

அது உங்களுக்கு எப்போதும் நிலைத்து நிற்க உதவாது, தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் அப்படி தோல்வி அடைந்துவிட்டால், தோல்வி அடைந்துவிட்டோமே என்று எண்ணாமல், நமக்கு எதிரணியாக இருந்தவர் நம்மை விட சற்று தெளிவாக செயல்பட்டுவிட்டார் என்று மட்டுமே எண்ணுங்கள், நீங்கள் நிங்களாக இருந்தால், கண்டிப்பாக ஒரு நாள் சாதீப்பீர்கள் என்று கூறியுள்ளார்.

ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் ஒருவரை போல் இருக்க முயற்சி செய்தால், மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள், அதுவே உங்கள் முயற்சியில் உங்களுடைய தனிப்பட்ட ஸ்டைலில் வந்தால், மக்கள் அதை எப்போதும் மறக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*