சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் தவிக்கும் சிங்கம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

loin55652

பங்களாதேஷின் தாகா பகுதியில் உள்ள கோமிளா வன விலங்குகள் சரணாலயத்தில் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் சிங்கம் ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.

18 வயதாகும் Juboraj (சிங்கத்தின் பெயர்) இந்த நிலை கண்டு பார்வையாளர்கள் அனைவரும் மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

மேலும் பொதுமக்கள் சிலர் சிங்கத்திற்கு சரியான முறையில் வைத்தியம் செய்ய வேண்டும் இல்லையென்றால் கருணைகொலை செய்துவிடுமாறு கூறினர்.

தற்போது சிமெண்ட் தரையில் வசிக்கும் அந்த சிங்கத்திற்கு ஊசி மூலம் மருந்து வழங்கப்படுகிறது.

தற்போது மக்கள் பார்வையிலிருந்து சிங்கம் மறைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர் நஸ்முள் ஹசன் பேட்டியளித்துள்ளார்.

அதில் வயது முதிர்வின் காரணமாக சிங்கத்திற்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இனி பொது மக்களின் பார்வையிலிருந்து நிரந்தரமாக மறைக்கப்படுவதாக கூறினார்.

பங்களாதேஷின் சட்டத்தில் கருணைக் கொலை அனுமதிக்கப்படாததால் தொடர்ந்து சிகைச்சை மட்டும் தான் அளிக்க முடியும் எனவும், மத்திய கால்நடை மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை வழங்கப்படும் என்றும் தாக்கா சரணாலய அதிகாரி நஸ்ருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோமிளா சரணாலயத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் குமார் கூறுகையில் Juboraj மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், சிங்கங்களின் சராசரி வாழ்க்கை காலம் 14 வருடங்கள் தான் என்றும், குறித்த சிங்கத்திற்கு 18 வயதாகவும் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit