பள்ளி மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவில் 15 வயது மாணவனுடன், பள்ளி ஆசிரியை உறவு வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Texas மாகாணத்தைச் சேர்ந்தவன் 15 வயது மாணவன், Michelle Schiffer(23) என்ற பெண் ஆசிரியை அவனுடன் உறவு வைத்துக் கொண்டது மட்டுமின்றி, கஞ்சா புகைப்பது போன்ற பழக்கங்களையும் சொல்லிக் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Houston பகுதியில் உள்ளது Cypress Springs உயர்நிலைப் பள்ளி, இங்கு ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் Michelle Schiffer(23), இவருக்கும் அதே பள்ளியில் படித்து வரும் 15 வயது மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது பழக்கம் முதலில் அங்கிருக்கும் Chick-fil-A ரெஸ்ட்டாராண்டில் ஏற்பட்டுள்ளது, அதன் பின் இவர்கள் பழக்கம் மிகவும் நெருக்கம் ஆகியதால், Barker-Cypress-ல் மாணவனின் நண்பர் இருக்கும் அபார்ட்ண்ட்மெண்ட்டில் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காரில் கஞ்சா அடித்தல் மற்றும் மீண்டும் உறவில் ஈடுபடுதல் போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பழக்கம் கடந்த கோடை காலம் வரை தொடர்ந்துள்ளது.

இது குறித்த விவகாரம் பொலிசாருக்கு தெரியவந்தால், பள்ளி மாணவனை வற்புறுத்தி இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி Michelle Schiffer-ஐ கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர் $30,000 டொலர் செலுத்தினால், பெயிலில் அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதற்கான தொகையை அவர் கட்டத்தவறியதால் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், அந்த ஆசியரியை உடனடியாக பணி நீக்கம் செய்துவிட்டதாகவும், தங்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இதோடு Cypress Fairbanks பள்ளி மாவட்டத்தில் மூன்றாவது ஆசிரியை இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 2015-ஆம் ஆண்டு Cypress Creek மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த Brian Drake என்ற ஆசிரியை பள்ளி மாணவனுடன் தகாத முறையில் உறவு வைத்துக் கொண்டதாகவும், Nicole Jubiak என்ற ஆசிரியை பள்ளி மாணவன் ஒருவனுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*