சுனாமி பயமில்லை… வதந்தியை நம்பாதீர்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை, மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஓகி புயல், கன்னியாகுமரியிலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சுனாமி பேரலைகள் தாக்கப் போவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், சுனாமி எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜான்சிங் சவான் கூறியுள்ளார்.

மேலும் தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

ஓகி புயல் காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

பெரும்பாலான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*