அதைபற்றி கேட்டதும் ஜெயலலிதா கோபமடைந்தார்: சுப்பிரமணிய சுவாமி திடுக் தகவல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

supramaiya suwami

மகள் விவகாரம் குறித்து கேட்டபோது ஜெயலலிதா கோபமடைந்ததாக சுப்பிரமணிய சுவாமி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மகள் தாம் தான் என அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்காக கர்நாடக உயர்நீதிமன்றத்தினை நாடுமாறு, உச்சநீதிமன்றம் அம்ருதாவுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன் பாபுவுக்கும் 1980யில் பெண் குழந்தை பிறந்தது என்று அவரின் அத்தை மகள் லலிதா கூறியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பாஜக மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், 1991ஆம் ஆண்டு, நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, ஜெயலலிதாவின் வீட்டில் இரவு நேர விருந்து கொடுக்கப்பட்டது.

அப்போது ஜெயலலிதாவுடன் நான் பேசிக்கொண்டிருக்கும் போது, மகள் இருப்பதாக ஒரு பிரசாரம் செய்யப்படுகிறதே என அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், மிகவும் கோபப்பட்டதுடன், இதெல்லாம் கருணாநிதியின் பொய் பிரசாரம் என கூறினார். தற்போது ஒரு பெண் நீதிமன்றத்திற்கு மகள் எனக் கூறி சென்றிருக்கிறார்.

அவர் ஜெயலலிதாவின் மகள் தானா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit