
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு, திசர பெரேரா அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, டிசம்பர் 10, 13 மற்றும் 17 ஆகிய திகதிகளில் ஒருநாள் தொடரிலும்
டிசம்பர் 20, 22 மற்றும் 24 ஆகிய திகதிகளில் டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான இலங்கை அணியின் தலைவரை இன்று அறிவிக்க இருப்பதாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்திருந்தது.
அதன்படி, இலங்கை அணியின் புதிய தலைவராக இடக்கை வீரர் திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.