முடிந்தால் என் பந்து வீச்சை அடித்து பாருங்கள்: சவால் விடும் அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

NOTHAN LION

அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் முடிந்தால், என் பந்து வீச்சை அடித்துப் பாருங்கள் என்று இங்கிலாந்து வீரர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 2-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டி குறித்து அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் லயன் கூறுகையில், இங்கிலாந்து அணியினர் என்னை அடித்து ஆடினால் நிச்சயம் என் வலையில் விழுவர். என் பந்து வீச்சை அடித்துத் துவைத்து என்னை பந்துவீச்சிலிருந்தே தூக்குமாறு செய்தால் எனக்கு அது பிடிக்கவே செய்யும்.

நிச்சயம் கடந்த டெஸ்ட் போட்டியை விட வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியினர் எனக்கு எதிராக சிறந்த உத்தியுடன் இறங்குவார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட சவால்கள்தான் கிரிக்கெட் ஆட்டத்தின் வேடிக்கையே,வலது கை, இடது கை வீரர்களுக்கும் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு வீசும் சவால்கலை நான் எப்பவும் விரும்பியே இருக்கிறேன்.

வீரர்கள் அடித்து ஆடும்போதுதான் எனக்கும் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே இது எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது, சவாலை எதிர்நோக்குகிறேன் என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit