22 வயதில் ஏலியனான இளைஞன்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-0-560-350-160-300-053-800-668-160-90-2

அமெரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் தன்னை பாலினம் சாராத ஏலியனாக மாற்றிக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வின்னி ஓ. பகுதி நேர மொடலாக உள்ள இவர் தன்னுடைய 17-வது வயதில் முதல் முறையாக உதட்டில் பல்வேறு சாயங்களை பூசி இந்த முயற்சியை தொடங்கியுள்ளார்.

அதற்கு பின் 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள இவர் எந்த பாலினத்தையும் சாரதவராக இருக்க தன்னுடைய பிறப்புறுப்பை விரைவில் அகற்றப்போவதாக கூறியுள்ளார்.

இதுவரை தன்னை ஏலியனாக மாற்றிக் கொள்ள அதிக தொகையை செலவு செய்துள்ள வின்னி, பிறப்புறுப்பு மற்றும் தொப்புள் போன்றவற்றை அகற்ற 130,000 டொலர்கள் வரை செலவு செய்யவுள்ளார்.

முழுமையாக தன்னை வேற்று கிரக வாசியாக மாற்றிக்கொள்ள துடிக்கும் இவர் பிறப்புறுப்பு இல்லாமல் வாழ்வது சாத்தியமே என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது மருத்துவர்கள் கூறுகையில் அதிர்ஷ்டம் இருந்தால் பிறப்புறுப்பு இல்லாமல் இருப்பது சாத்தியமே என கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit