விடுதலைப்புலிகள் காலத்தில் பெண்களுக்கு துஸ்பிரயோகங்கள் இடம்பெறவில்லை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அச்சுறுத்தல்கள் என்பது தொடா்பில் நாங்கள் அறிந்திருக்கவில்லை என வடமாகாண மகளீா் விவகார அமைச்சா் அனந்தி சசிதரன் தெரிவித்தாா்.

அமைச்சா் அனந்தி சசிதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வடமாகாணத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு டப்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கையிலேயே அவா் இதனைத் தொிவித்தாா்.

அவா் மேலும் தொிவிக்கையில்,

கிழக்குடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஸ்பிரயோகங்களும் வடக்கில் அதிகாித்த நிலையில் இருக்கின்றது.

பெண்கள்தான் பெண்களின் பிரச்சனைகளை பேசவேண்டியவா்களாய் இருக்கின்றனா். அதனால்தான் பெண்கள் கொள்கையின் அடிப்படையில் அரசியலுக்கு வரவேண்டும்.

இலங்கை அரசு ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் ஒரு தேசமாகும். அந்த கொள்கையின் அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு

வரவேண்டும்.

பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக நாங்கள் நீதிகோரும் பயணத்தினை மேற்கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் அபிவிருத்தியையும் கல்வி மேம்பாட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*