பார்சிலோனா அணியில் இருந்து விலக வாய்ப்பு: ஒப்புக் கொண்டார் மெஸ்ஸி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பார்சிலோனா கிளப் அணியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதை, அந்த அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஒப்புக் கொண்டார்.

சமீபகாலமாக மெஸ்ஸி, பார்சிலோனோ பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற ரியல் சோசியாடாட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி களமிறக்கப்படவில்லை. அதோடு, அந்த ஆட்டத்துக்குப் பின் அவர் பயிற்சியிலும் ஈடுபடவில்லை. எனவே, மெஸ்ஸி இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் செல்சீ, மான்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகளுக்கு மாற இருப்பதாகத் தகவல் வெளியானது.

ஆனால், அதை மெஸ்ஸி மறுத்திருந்தார். “எனது தந்தை செல்சீ, மான்செஸ்டர் சிட்டி நிர்வாகத்திடம் பேசி இருப்பதாக வெளியான தகவல் முழுக்க முழுக்கப் பொய்.

எல்லோருக்கும் உண்மை என்னவெனத் தெரியும். பார்சிலோனோவில் நீடிப்பதற்காக எந்த கோரிக்கையையும் முன் வைக்கவில்லை. ஏனெனில், இந்த அணியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை’ என மெஸ்ஸி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற, உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழாவில் மெஸ்ஸி பங்கேற்றார்.

இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று வீரர்களில் மெஸ்ஸியும் ஒருவர். முடிவில் மெஸ்ஸி, ஜெர்மனி கோல் கீப்பர் மேனுயல் நோயர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது முறையாக, ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறந்த வீரர் விருதை வென்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின், பார்சிலோனோவில் இருந்து வெளியேற இருப்பதை மெஸ்ஸி சூசகமாகத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “”நான் எப்போதுமே சொல்வேன், பார்சிலோனோ அணியுடன்தான் எனது கால்பந்து வாழ்வு முடிவுக்கு வரும். அதன் பின் ஆர்ஜெண்டினாவில், எனது சொந்த ஊரில் உள்ள நெவல் அணியில் ஆடலாம். ஆனால், அடுத்த ஆண்டு நான் எங்கு இருப்பேன் என எனக்குத் தெரியாது.

சமீபத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சொன்னதைப் போல, கால்பந்து என்பது பல திருப்பங்கள் நிறைந்தது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*