விஷம் குடித்தவரை காப்பாற்ற உடனே இதை கொடுங்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விஷத்தை நீக்கும் சிறந்த கிருமி நாசினியாக வசம்பு உதவுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த வசம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

வசம்பை கொண்டு விஷத்தை நீக்குவது எப்படி?

வசம்பு பொடியை விஷம் அருந்தியவர்களுக்கு உடனே 2-3 டீஸ்பூன் அளவு கொடுத்தால் அவர்களின் உடலில் உள்ளிருக்கும் விஷம் முழுவதும் வெளியேறிவிடும்.

வசம்பின் மருத்துவ குணங்கள்
 • வசம்பை நீரில் ஊறவைத்து அதை துவையலாக அரைத்துத் தேனில் கலந்து தினம் 3 வேளை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி வராது.
 • சிறிது வெந்தயத்துடன் ஒரு துண்டு வசம்பு போட்டு ஊற வைத்து அதை விழுதாக அரைத்து சாப்பிட்டால் அலர்ஜி குணமாகும்.
 • வசம்புடன் நீர் தெளித்து மையாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, உடம்பில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் சரும நோய்கள் நீங்கும்.
 • வசம்புடன் சிறிது கருப்பட்டி சேர்த்து பொடித்து அதை காலை, மாலை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 • சிறிதளவு சீரகத்துடன் வசம்பு சேர்த்து கஷாயம் செய்து பருகி வர வயிற்றுக் கோளாறுகள் சீராகும்.
 • வசம்பு, மிளகு, சுக்கு ஆகிய மூன்றையும் அரைத்து கஷாயம் செய்து குடித்து வர கை, கால் மூட்டுவலி நீங்கும்.
 • வசம்பைத் தூளாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவி மென்று வர ஆரம்பநிலை திக்குவாய் குணமாகும்.
 • வசம்பு, புதினா இலை, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து, அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
 • ஒரு துண்டு வசம்பு, 2 வெள்ளைப் பூண்டு பற்கள் ஆகியவற்றை நசுக்கி அதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, ஆறியதும் காதில் சில துளிகள் விட்டு வர காதுவலி குணமாகும்.
 • செவ்வாழைப் பழத்துடன் சிறிது வசம்புத் தூளைச் சேர்த்து சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்காகும்.
 • 2 வெற்றிலையுடன் சிறிது வசம்பு வைத்து மென்று தின்று, இரண்டு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்று உப்புசம் குணமாகும்.
 • வசம்பை தூள் செய்து 2 டீஸ்பூன் அளவு எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான தொற்று நோய்களும் குணமாகும்.
 • சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*