54 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதறிய இந்தோனேஷியா எரிமலை!

பிறப்பு : - இறப்பு :

54 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதறிய இந்தோனேஷியா எரிமலை!
54 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள மகுண்ட் அகுங் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள மகுண்ட் அகுங் எரிமலை கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதறியது. 1000க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ள இந்தோனேஷியாவில் 139 எரிமலைகள் உள்ளன. கடந்த 1963ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்த போது 7.5 கி.மீ தூரம் வரை நெருப்புக் குழம்புகள் பரவியது. இதில், 1100 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த எரிமலை மீண்டும் சீறத் துவங்கியுள்ளது. மேலும், கடும் சீற்றத்துடன் அதன் புகையுடன் கூடிய சாம்பல் வெளியேறியது. இதையடுத்து, எரிமலையின் சுற்றுப்பகுதியில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், பாலி தீவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று இந்த எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 12 கி.மீ தூரம் வரை எரிமலையில் சத்தம் கேட்டது. இதில், அப்பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்காக உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit