விரைவில் அறிமுகமாகின்றது Oppo F5 Youth யூத் ஸ்மார்ட் கைப்பேசி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Oppo விரைவில் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Oppo F5 Youth எனும் இப் புதிய கைப்பேசியானது 6 அங்குல அளவு, 2160 x 1080 Pixel Resolution உடைய FHD+ திரையினை கொண்டுள்ளது.

மேலும் MediaTek Helio P23 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

நனோ சிம் கார்ட் வசதி உடைய இக் கைப்பேசியில் 16 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 3200 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

அத்துடன் Android 7.1 Nougat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Color OS 3.2 இல் செயற்படக்கூடிய இக் கைப்பேசி கறுப்பு மற்றும் கோல்ட் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்படவுள்ள குறித்த கைப்பேசியின் விலையானது 275 டொலர்கள் ஆகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*