ஐந்து சதம்…20 விக்கெட் வரலாற்று வெற்றியில் இந்தியா: மிகவும் மோசமான தோல்வியில் இலங்கை

பிறப்பு : - இறப்பு :

நாக்பூரில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இதற்கு முன்னர் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி என்ற சாதனையை வங்கதேசம் அணிக்கு எதிராக 2007-ஆம் ஆண்டு இந்தியா படைத்திருந்தது. தற்போது இலங்கைக்கு எதிராக மீண்டும் அந்த சாதனையை படைத்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி இப்போட்டியில் இந்தியாவின் முரளி விஜய் 128, புஜாரா 143, கோஹ்லி 213, ரோகித் சர்மா 102 என மொத்தம் 5 சதம் அடிக்கப்பட்டது.

இதனால் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 610 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தது. தோல்வியை தவிர்க்க போராடிய இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மேலும் இந்த தோல்வி இலங்கை அணிக்கு 100-வது தோல்வியாகும், 100-வது தோல்வியை மிகவும் மோசமான வகையில் பதிவு செய்துள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 229 ஓட்டங்களில் தோல்வியடைந்ததே மோசமான தோல்வியாக இருந்தது.

தற்போது நாக்பூரில் இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மோசமான தோல்வியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit