மாணவியை வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

abused

பதுளை -ஹாலி-எல, இம்புல்கொட பிரதேசத்தில் 14 வயதான பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகுதி நேர வகுப்புக்குச் செல்வதாக வீட்டில் இருந்து சென்று தமது பிள்ளை வீடு திரும்பவில்லை என்பதால், பிள்ளை காணாமல் போயுள்ளதாக நேற்று ஹாலி-எல பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாடசாலை மாணவி தன்னை பாலியல் வன்புணர்வு உட்படுத்த நபருடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

32 வயதான இந்த நபர் ஹாலி-எல போகஹமலித்த பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

மாணவியை தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ள சந்தேக நபர், பேருந்தில் செல்ல மாணவியிடம் 20 ரூபாவை வாங்கிச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனிடையே மாணவி வெளிநாட்டில் உள்ள தனது உறவினர் ஒருவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தன்னை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் பின்னர் நேற்றிரவு 10 மணியளவிவில் ஹாலி-எல பொலிஸார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit