இலங்கை தொடர்: கோஹ்லி மீண்டும் சதம்… புதிய உலக சாதனை படைத்தார்

பிறப்பு : - இறப்பு :

நாக்பூர் டெஸ்ட்டில் சதமடித்துள்ள கோஹ்லி இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

இலங்கை – இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 312 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது.

இந்திய அணி தலைவர் கோஹ்லியும், புஜாராவும் தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் வேகமாக ஓட்டங்கள் சேர்த்த கோஹ்லி டெஸ்ட் அரங்கில் தனது 19வது சதத்தை எட்டினார்.

டெஸ்ட் அரங்கில் அணித் தலைவராக கோஹ்லி பதிவு செய்யும் 12வது சதம் இதுவாகும்.

இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக சதங்களை விளாசிய இந்திய தலைவர்கள் பட்டியலில் முன்னாள் தலைவர் கவாஸ்கரை (11 சதங்களை) பின்னுக்கு தள்ளி கோஹ்லி முதலிடம் பிடித்தார்.

தவிர, ஒரே ஆண்டில் அதிக சதம் விளாசிய தலைவர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை (9 சதம்) பின்னுக்கு தள்ளி கோஹ்லி (10 சதம்) புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டிலும் கோஹ்லி சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit